1. Home
  2. தமிழ்நாடு

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் என்ன நன்மைகள்?

1

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க (How to Link Voter ID with Aadhar) புதிய வாக்காளர்கள் படிவம் 6 ஐயும், பழைய வாக்காளர்கள் படிவம் 6B ஐயும் நிரப்ப வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் உள்ளன: 

  • தங்களது ஆதார் எண்ணை வழங்கலாம். 
  • தங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்று தெரிவிக்கலாம். 

யாரிடமாவது ஆதார் அட்டை இல்லையென்றால், அவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற பிற ஆவணங்களை வழங்கலாம்.


ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் என்ன நன்மைகள்?

வாக்காளர்கள் தங்கள் ஆதார் அட்டையின் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க முடியும். காகித நடைமுறைகள் இல்லாமல் முகவரியை மாற்றலாம் அல்லது புதிய அடையாள அட்டையைப் பெறலாம். 

வாக்குச் சாவடியில் அடையாள சரிபார்ப்பு எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. 

ஆதார் இணைப்பு போலி வாக்களிப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கும். வாக்காளர்களின் வாக்குகள் சரியான முறையில் பதிவு செய்யப்படும். 

வாக்காளர் பட்டியலில் பெயர் அல்லது முகவரி போன்ற ஏதேனும் பிழைகள் இருந்தால், ஆதார் இணைக்கப்பட்டவுடன் அதை சரி செய்வது எளிதாக இருக்கும். எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும்.


 

Trending News

Latest News

You May Like