1. Home
  2. தமிழ்நாடு

எந்தெந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

எந்தெந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாள் கிழமைகளை விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என அறிந்து அதனை கடைப்பிடிக்க கூடுதல் பலன்களை பெறலாம்.

கிழமைகளுக்கான பலன்கள்

  • ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதால் நீண்ட கால நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.
  • திங்கட்கிழமைகளில் இருக்கும் விரதத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  • செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.
  • புதன்கிழமைகளில் விரதம் இருப்பதால் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
  • வியாழக்கிழமை விரதம் இருப்பதால் குழந்தைப் பேறு சந்தான பாக்கியம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் தம்பதியர்கள் ஆதர்சத்துடன் திகழ்வதுடன் அவர்களின் ஆயுள்பலம் கூடும்.
  • சனிக்கிழமை விரதம் இருப்பதால் வேலை, தொழில் விருத்தி அடைந்து செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

Trending News

Latest News

You May Like