தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!

தீர்மானம் 1
நாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்போம். பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம். விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய அரசு அவர்களின் கண்களை குத்துகிறது. பரந்தூர் மக்களை ஏன் முதல்வர் இன்னும் சந்திக்கவில்லை.
பரந்தூர் பகுதி விவசாய மக்களை தயவு செய்து நேரில் சந்தித்து பேசுங்கள். உங்களுடைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ பேசக்கூடாது. அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை தமிழக முதல்வர் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் கடந்து போக வேண்டும் என்று நினைத்தால், பரந்தூர் பகுதி மக்களை நானே அழைத்து வந்து தலைமை செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உருவாகும்.
தீர்மானம் 2
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக.
அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் தமிழ்நாடு.
எனவே, இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவமரியாதைக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது.
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குலைந்து கூட்டணிக்கு போக, நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. நாங்கள் தமிழக வெற்றிக் கழகம். கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றி கழகம் மிக உறுதியாக இருக்கிறது.
கூட்டணி என்றாலும் தமிழக வெற்றி கழகம் தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களது கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாக தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட இச்செயற்குழு வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். இது உறுதியான தீர்மானம்.
தீர்மானம் 3
விவசாயிகளின் பக்கம் நாம் எப்போதும் நிற்போம். அவர்களின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகாரம் மீறலை கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். திருவண்ணாமலை
தீர்மானம் 4
நெல் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
தீர்மானம் 5
பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.
தீர்மானம் 6:
திருச்சி மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 7 :
என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக வலியுறுத்தி தீர்மானம்.
தீர்மானம் 8:
விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்ற கோரிய தீர்மானம்.
தீர்மானம் 9 :
திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனை திரவிய ஆலை அமைக்க வேண்டும்.
தீர்மானம் 10 :
தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
தீர்மானம் 11:
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து அவரது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்ததும் மனசாட்சி இல்லாமல் கைகழுவி விட்டது இந்த கபட நாடக திமுக அரசு.
தற்போதைய ஆட்சி தலைமையின் குடும்ப நலனை மட்டுமே கருதுகிறது. திமுக அரசுக்கு தமிழக மக்களின் நலனோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நலனோ முக்கியமில்லை. அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது.
தீர்மானம் 12 :
கொரோனா காலத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மருத்துவர்களின் ஊதியம் மற்றும் காலிப்பணியிடங்கள் தொடர்பான கோரிக்கைகளை கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், நிறைவேற்றி தர வேண்டும்.
தீர்மானம் 13:
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்.
தமிழக மீனவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் இலங்கை அரசு எல்லைத்தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி மாதக்கணக்கில் அவர்களை சிறை வைக்கும் போக்கை கையாண்டு வருகிறது.
அடிப்படை வாழ்வாதாரம் எப்படி குற்றமாகும் என்ற நம் மீனவர்களின் கேள்வியோடு மோசமான விதிகளை கையாண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நிறுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் 14:
பேரறிஞர் அண்ணாவின் இரு மொழி கொள்கைதான் எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை ஆகும் அதை தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக பின்பற்றுகிறது.
தீர்மானம் 15:
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தீர்மானம் 16:
கீழடியில் தமிழர் நாகரீகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு கண்டனம்.
தீர்மானம் 17:
தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக கபட நாடக திமுக அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம். ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரியாக பார்க்கும் நோக்கம் அதிலும் மாபெரும் மக்கள் சக்தி பெற்றிருக்கும் தமிழக வெற்றி கழகம் என்றாலே பயமும் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டமோ மக்கள் சந்திப்போ எதையும் இந்த திமுக அரசு தடுக்கிறது. பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது திமுக அரசு. அதிகார மமதையில் ஆட்டம் போடும் திமுக அரசை வன்மையாக எச்சரிக்கிறோம்.
தீர்மானம் 18:
ஓரணியில் திரள்வோம் என்று உறுப்பினர் சேர்க்கைக்கு வீடு வீடாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று கொண்டிருக்கிறார். ஆனால், காவல்துறையில் விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.
தீர்மானம் 19:
தொகுதி மறு சீராய்வு ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அதில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்காய்வு நடத்த வேண்டியதில்லை என்று சொல்வது ஒன்றிய பாஜக அரசின் ஏமாற்று வேலையின்றி வேறு என்ன?
அனைத்து சமுதாய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி சூழல் குறித்த தெளிவான பார்வை இல்லாத கணக்கெடுப்பை எந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் ஏற்காது.
இட ஒதுக்கீட்டிற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடும் ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீராய்வு என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்திலும் அநீதி இழைக்க முயல்கிறது. இதோடு மட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே திட்டம் என்று திட்டமிடுவதன் மூலம் ஜனநாகமே கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய ஏதேச்சதிகார போக்கை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது.
தீர்மானம் 20:
பெரியார் அண்ணாவை அவமதிக்கும் பாஜகவின் பிளவு வாத அரசியலை கண்டிக்கிறோம். தமிழ்நாடு எப்போதும் மத சார்பற்ற பூமி. சமூக நல்லிணக்கத்தையும் சமூக நீதியையு போற்றும் மண். ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை காக்கும் மாநிலம்.
இங்கு விஷத்தையோ, விஷமத்தையோ விதைத்தால் அந்த முயற்சி துளி கூட துளிர்க்காது. இன்றளவும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பெரியார், அண்ணா ஆகியோரை களங்கப்படுத்தும் முயற்சி தமிழகத்தில் துரும்பளவு பலன் கூட கிடைக்காது. பிளவுவாத அரசியலை பாஜக எந்த வடிவத்தில் செய்தாலும் தமிழக மக்கள் அதனை முறியடிப்பார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
— TVK Party HQ (@TVKPartyHQ) July 4, 2025
(1/3) pic.twitter.com/YmnePV5Y0W
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
— TVK Party HQ (@TVKPartyHQ) July 4, 2025
(1/3) pic.twitter.com/YmnePV5Y0W