1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷா சொன்னது தான் நடக்கும்...அண்ணாமலை கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து..வானதி சீனிவாசன்..!

Q

மதுரை வந்த அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டுச் சென்றது விவாதத்தை கிளப்பியது. இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சிதான் என்று சொல்வேன். ஆனால், இப்போது கட்சித் தலைவர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். ஆகவே, கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “ஒரு தேசியக் கட்சியில் தேசியத் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் கட்சியில் அனைவரும் சொல்ல வேண்டும். தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவராக அண்ணாமலை அவர் கருத்தைக் கூறியுள்ளார். அவர் கூறும்போது கூட அது தனது சொந்தக் கருத்து என்றுதான் குறிப்பிடுகிறார். ஆனால், அதனை பூதாகரப்படுத்தி வருகின்றனர்.
பாஜகவை பொறுத்த வரை ஒரே நிலைப்பாடு தான். ஏற்கனவே உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் கூட்டணி அமைந்தபோது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி இருக்கும் என்று சொல்கிறார். இதில் குழப்பமோ, மாற்றுக் கருத்தோ யாருக்கும் கிடையாது” என்று தெரிவித்தார்.
கூட்டணி அரசு குறித்து அதிமுக எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, “கூட்டணி அமைச்சரவை, கூட்டணி அரசு உள்ளிட்ட விஷயங்களில் தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதையே தமிழக பாஜக தலைமை பின்பற்றும். தமிழக பாஜக என்பது தனிக் கட்சி அல்ல. தேசிய பாஜகவின் ஒரு அங்கம் தான் தமிழக பாஜக. ஆகவே, அமித்ஷா சொன்னதுதான் தமிழ்நாட்டில் நடக்கும்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like