நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்.! பாலியல் தொழிலாளியைக் கொன்று மூளையை வறுத்துச் சாப்பிட்ட கொலையாளி..!
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில்தான், ரத்த ரத்தக்கறை படிந்த சூட்கேஸை போலீசார் கண்டெடுத்துள்ளனர். பெட்டிக்குள், பெண்ணின் சடலம் துண்டு துண்டாக இருந்தபோதே, இந்தக் கொலையின் தீவிரத்தை போலீசார் உணர்ந்து கொண்டனர்.
பெண்ணின் வயதை வைத்து, தமிழகத்தில் காணாமல் போன இளம் பெண்களின் லிஸ்ட்டை ஆராய்ந்தபோதுதான், துரைப்பாக்கம் போலீசில் தங்கள் மகளைக் காணோம் என்று கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் தந்தனர். இதற்குப் பிறகே, துரைப்பாக்த்தில் வலையை வீசிய போலீசார் கொலையாளி மணிகண்டனை கைது செய்தனர்.
கொலையாளி: 25 வயதான மணிகண்டன், 35 வயதான பாலியல் தொழில் செய்யும் பெண்ணான தீபா என்பவரை வீட்டுக்கு வரழைத்துள்ளார்.. இவர்களுக்குள் நடந்த பணத்தகராறில், தீபாவை கொலையும் செய்து, சூட்கேஸில் வைத்து வீசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.
கொலையாளி மணிகண்டன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. என்ஜினியருக்கு படித்திருக்கிறார்.. சென்னையில் கார் கம்பெனி ஒன்றில் இவருக்கு வேலை கிடைத்திருக்கிறது. துரைப்பாக்கத்தில் இவரது அக்கா, மாமா இருவரும் இருப்பதால், அந்த வீட்டிலேயே மணிகண்டனும் தங்கியிருக்கிறார். ஆனால் கடந்த 2 மாதமாகத்தான் இந்த வேலைக்குச் சென்றுவருகிறாராம்.
கடந்த 3 நாட்களாகவே அக்கா, மாமா வெளியூர் சென்றதால், அந்த நேரத்தில் ஜாலியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே தீபாவை வரவழைத்துள்ளார். கூடுதல் தொகை தீபா கேட்டதால், ஆத்திரத்தில்தான் சுத்தியாலால் தீபாவை தாக்கியிருக்கிறார்.. கொலை செய்யும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லையாம். இதனால் சடலத்தை உடனடியாக மறைக்க வேண்டும் என்பதே மணிகண்டனின் முதல்வேலையாக இருந்திருக்கிறது.
சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த 18ம் தேதி, பெருங்குடியில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் வாங்கியுள்ளார். சூட்கேசில் உடலை அடைக்க, கால் மூட்டு உள்ளிட்ட பாகங்களைச் சுத்தியால் அடித்து வளைத்து, திணித்துள்ளார். அதற்குப் பிறகு வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில், சடலம் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசிவிட்டு, வீட்டிற்கு சென்று தூங்கியிருக்கிறார்.
நேற்று அதிகாலை 3.30 மணிக்குச் சூட்கேஸை வீசியதால், நேற்று காலை 6 மணிக்கே அது பொதுமக்களின் கண்ணில் பட்டுவிட்டது.. துரைப்பாக்கம் பார்த்த சாரதி நகர் 1வது தெருவில்தான் சூட்கேஸ் வீசப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர்தான் சூட்கேஸை முதலில் பார்த்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ்காரர், பொன்னுசாமியை அழைத்துச் சூட்கேஸை காட்டியிருக்கிறார். இதன் பிறகே போலீசாருக்கு தகவல் பறந்து விசாரணை நடந்துள்ளது.
ஐடி கம்பெனிகள்: துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதுமே ஐ.டி. கம்பெனிகள் நிறைந்த பகுதியாகும்… இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் அங்கு வசித்து வருகிறார்களாம்.. இத்தனை வீடுகள் இங்கு இருப்பது மணிகண்டன் அறியவில்லை.. இந்தக் குடியிருப்புக்கு நடுவே சூட்கேஸ் விழுந்ததுதான், மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது. அதனால் போலீசார் சூட்கேஸை கைப்பற்ற போனதுமே, ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்கத் திரண்டு வந்துவிட்டனர். அவர்களும் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தீபாவை கொலை செய்த மணிகண்டன் அவரது மூளையை வறுத்துச் சாப்பிட்டதாகப் போலீசார் அதிர்ச்சி தகவலைச் சொல்லியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, நேற்று காலை ஊருக்குச் சென்ற அக்கா, மாமா வீட்டுக்குள் வந்தபோது, எதுவும் நடக்காததுபோல் அமைதியாக உப்புமா சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாராம்.. மணிகண்டன் உப்புமா சாப்பிடும்போதுதான் போலீசார் உள்ளே சென்று அவரை அலேக்காகத் தூக்கி வந்திருக்கிறார்கள். குற்றவாளி: சென்னை மாநகர் முழுவதுமே இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்தக் கொலை தொடர்பாகக் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்வதற்கு, மிகவும் உதவியாக இருந்தது, அந்தப் பகுதி சிசிடிவி கேமராக்கள்தான்.. தற்போது மணிகண்டனிம் தொடர் விசாரணை நடக்கிறது..