கணவன்-மனைவி செய்த கேவலமான செயல்..! மாணவிகளுக்கு கஞ்சா பிரியாணி கொடுத்து வீடியோ எடுத்து...
திருப்பதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பதியில் உள்ள பிரபல பல்கலையில் பி.எல். இறுதியாண்டு படித்து வருகிறார் பிரணவ் கிருஷ்ணா என்ற இளம்பெண்.. இவருடன் சட்டக்கல்லூரியில், கர்னூலை சேர்ந்த பெண் ஒருவர் படித்து வந்தார்.. அவருடனான நட்பு இன்று வரை பிரணவ் கிருஷ்ணாவுக்கு நீடித்து வருகிறது.
தன்னுடன் படித்த கர்னூல் தோழியை, தன்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வரும்படி அழைப்பு விடுப்பாராம் பிரணவ் கிருஷ்ணா.அப்படி வந்த கர்னூல் தோழிக்கு ஸ்பெஷல் பிரியாணி செய்வாராம்.. அந்த பிரியாணியில் அவருக்கே தெரியாமல் கஞ்சாவை கலந்து கொடுப்பாராம்.
கஞ்சா பிரியாணியை சாப்பிட்டுவிட்டு, போதையில் விழும்போது, பிரணவ் கிருஷ்ணாவின் கணவர் கிஷோர் ரெட்டி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்வாராம்.. கணவர் தோழியை பலாத்காரம் செய்வதை பிரணவ் கிருஷ்ணா வீடியோ எடுத்து வைத்து கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது.ஒருகட்டத்தில் இந்த வீடியோ, போட்டோக்களை எல்லாம், இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்த பிரணவ் கிருஷ்ணா தம்பதியினர், இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டார்களாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்..
ஒருகட்டத்தில் தம்பதி செய்யும் டார்ச்சரை தாங்கி கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி போலீஸில் நேற்று புகார் தந்துவிட்டார்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணையையும் மேற்கொண்டனர். அப்போதுதான், இதுபோலவே இளம்பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, கஞ்சா பிரியாணியை சுடச்சுட பரிமாறி, அவர்களை சீரழித்தது தெரிவந்துள்ளது.. வேறு ஒரு பெண்ணிடம் இப்படித்தான் மிரட்டி 5 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்திருக்கிறார்களாம் இந்த தம்பதி..
எனவே இவர்கள் வலையில் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள், போலீசில் புகார் அளித்தால், தம்பதிக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..