சிங்கப்பூரில் சிறுமியிடம் முத்தம் கேட்ட இந்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் !

இந்தியாவைச் சேர்ந்த செல்லம் ராஜேஷ் கண்ணன்(26) என்ற இளைஞர் 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இவரது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை இந்தியாவில் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.
இவருக்கு சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி நேரில் சந்திக்க தொடங்கினர். அப்போது, அவர்கள் இருவரும் பரிசு பொருட்களை பறிமாறிக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 8ஆம் தேதி, அந்த பெண்ணின் வீட்டிற்கு ராஜேஷ் கண்ணன் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை முத்தம் கொடுக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறும் அவர் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நபர்மீது சிறுமியின் பெற்றோர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணையில் குற்றத்தை ஒத்துக்கொண்ட செல்லம், தான் இவ்வாறு நடந்துகொண்டதற்காக வெட்கப்படுவதற்காகவும், நான் இதுவரை எந்த குற்றம் செய்யவில்லை எனவும் தன்னை விடுவிக்குமாறும் மன்றாடியுள்ளார்.
எனினும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும், பாலியல் தொல்லை கொடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஷான் ஹோ கூறியிருக்கிறார்.
newstm.in