1. Home
  2. தமிழ்நாடு

என்ன குடும்பம் இது..! சாலையில் நடந்து சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்திய மகன்.. வேடிக்கை பார்த்த தாய்..!

1

ஐதராபாத்தில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று, பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரவு 8 மணி இருக்கும். அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன் வந்து கொண்டிருந்தார். அவர், துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் பலவந்தமாக அந்த பெண்ணின் ஆடைகளை இழுத்து நிர்வாணப்படுத்தினார்.

fight

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பெண் ஒருவர் இந்த மோசமான செயலை தடுத்து நிறுத்தி, ஆடை களையப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றார். இதன் பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இளைஞருக்கு அடி கொடுத்த பெண்ணை காப்பாற்றினர். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரை கைது செய்தனர். இதற்கிடையே மகன் குற்றம் செய்தபோது அவரை தடுக்க அவரது தாயார் முன்வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

arrest

இதுகுறித்து சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மணிப்பூரில் 2 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்ததோ அதுதான் ஐதராபாத்தில் இன்று நடந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like