1. Home
  2. தமிழ்நாடு

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா..!

Q

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக டெஸ்ட் கிரிக்கெட்அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த கிரேக் பிராத்வெய்ட் தற்போது அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஷாய் ஹோப் செயல்படுவார் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. தற்போது டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோவ்மன் பவல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவல் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவிக்க தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like