1. Home
  2. தமிழ்நாடு

மே.வங்க கோர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

1

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிகுரியிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 18) காலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, விபத்துக்கு காரணமான சரக்கு ரயிலின் ஓட்டுநர், பயணிகள் ரயில் கார்டு உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோர் விபரங்கள் வருமாறு., அனில் குமர்(46) - சரக்கு ரயிலின் ஓட்டுநர், ஆஷிஷ் தே(47) - பயணிகள் ரயில் கார்டு. பயணிகள் விபரம்: சுபஜித் மாலி(32), செலேப் சுபா(36), பியூட்டி பேகம்(41), சங்கர் மோகன் தாஸ்(63), விஜய் குமார் ராஜ், மேலும் மூவர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளான் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீதமுள்ள பெட்டிகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (ஜூன் 18) அதிகாலை 3.20 மணியளவில் கொல்கத்தாவிலுள்ள சியால்தஹ் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

Trending News

Latest News

You May Like