மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: திரிணாமுல் காங். அமோக வெற்றி..!

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நடைபெற்று முடிவடைந்த உள்ளாட்சித் தேர்தல், ஒரு சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தல் போல அத்தனை களேபரங்கள், வன்முறைகள், படுகொலைகள் நடந்தேறின. தேர்தல் பிரசாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரையில் ஆகப் பெரும் வன்முறைக்கு இடையே மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் நடந்தது.உள்ளாட்சி இடங்கள் வருமாறு., கிராம பஞ்சாயத்துகள் 3,317, 22 ஜில்லா பரிஷத்துகளில் 928 இடங்கள், 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்கள், 63,239 வார்டு உறுப்பினர்கள், தேர்தல் நடைபெற்ற மொத்த இடங்கள்: 73,887. மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 2,36,464, திரிணாமுல் காங்கிரஸ் 85,817, பாஜக 56,321, மார்க்சிஸ்ட் கட்சி 48,646, காங்கிரஸ் 17,750, மொத்த வாக்காள்ர்கள்: 5.60 கோடி.
இதற்கிடையே நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளில் (63,239) திரிணாமுல் காங்கிரஸ் 6593 அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக- வெற்றி-1251; சிபிஎம்- வெற்றி- 437; காங்கிரஸ் வெற்றி- 213. மேலும் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் உள்ளதால் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்.