1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள் ஜூன் மாதத்தில் பிறந்தவரா ? உங்கள் குணநலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

1

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறப்பான ஆளுமையை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பழகுவதிலும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வத்துடன் இருப்பார்கள். பிறர் மத்தியில் இவர்கள் பிரபலம் போல தோன்றுவார்கள். இவர்கள் பாட்டு, நடனம் என கலைத்துறையிலும், விளையாட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.

அவர்களிடம் மிக சிறப்பான கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். மென்மையான இவர்கள் தங்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு சிறப்பாக சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். உடனடியாக சொந்த முயற்சியில், சிந்தனையில் எந்த ஒரு வேலையும் செய்து முடிக்க நினைப்பவர்கள். இவர்களின் இந்த தனி திறமையால் ஒரு எஜமானர் போல செயல்படுவார்கள்.

இவர்களின் மனதில் எப்பொழுதும் புதிய எண்ணங்களும், கேள்விகளும் ஓடிக்கொண்டே இருக்கும். அனைத்தையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் இவர்கள் எதையும் நீண்ட காலம் செய்யமாட்டார்கள் அதற்கான பொறுமை இவர்களிடம் இருக்காது.

இவர்கள் அதிக கனவு காண்பவர்களாக இருப்பார்கள் இவர்களின் கற்பனைகளுக்கு எல்லை என்பதே கிடையாது. புதிய யோசனைகளை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பதுடன் மற்றவர்களின் யோசனைகளுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். இவர்கள் தன்னை போலவே வித்தியாசமாக சிந்திப்பவர்களுடன் பழக அதிகம் விரும்புவார்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அனைத்தும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். தனக்கு கிடைக்கும் அனைத்தும் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்கள் இவர்கள். நினைத்தது எளிதாக கிடைக்கவில்லை எனில் சீக்கிரமாக மனமுடைந்து விடுவார்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் தனது தோற்றம் மற்றும் உடைகளின் மீது எப்பொழுதும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். தங்கள் தோற்றத்தை பற்றி அவர்கள் அதிக கவலைப்படுவார்கள். குறிப்பாக மற்றவர்களை போல உடை அணியக்கூடாது என்பதில் அதீத கவனமாக இருப்பார்கள்.

இவர்களின் மிகசிறந்த பலம் என்னவெனில் இவர்களின் உள்ளுணர்வுதான். ஏனெனில் இது மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ளவும் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள இவர்களுக்கு உதவும். மற்றவர்களின் பிரச்சினைகளை அவர்களின் முகத்தை பார்த்தே அறிந்து அதற்கான தீர்வை கூறுவார்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஒரே நாளில் பல மனநிலைக்கு இவர்கள் ஆளாவார்கள். இவர்களின் குணம் காற்று வீசும் திசை போல மாறிக்கொண்டே இருக்கும். நல்ல மனநிலையில் இருக்கும்போது இவர்கள் மிகவும் உற்சாகமாகவும், மோசமான மனநிலையில் மிகவும் சோர்வாகவும். சோகமாகவும் இருப்பார்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் சிறந்த பொழுதுபோக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகும், இவர்கள் அதில் அதிக மகிழ்ச்சியும் அடைவார்கள். இவர்களை வாக்குவாதத்தில் ஜெயிப்பதுஎன்பது மிகவும் கடினமானதாகும். வாக்குவாதத்தில் ஈடுபடும் முன் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு சரியான குறிப்புகளுடன்தான் அதில் இறங்குவார்கள். இவர்கள் பெரும் விதமும் இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் தோல்வியடைந்து விட்டால் அதனை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் பிடிவாதம் தோல்வியை ஒப்புக்கொள்ள அனுமதிக்காது.

வேலை, தொழில்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு குணம் என்னவென்றால், அவர்கள் எந்த ஒரு வேலையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். தங்களால் முயன்ற அளவில் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்ற அளவில் கடின உழைப்பு அவர்களிடம் இருக்கும். அதே சமயம் தன்னுடைய முயற்சிக்கு நினைத்து பலன் கிடைக்காது போது சற்று எரிச்சல் அடைவார்கள்.

மனநிலை
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் மனநிலையை பிறரால் எளிதில் அறிய முடியாது. இவர்கள் பேசும் போது அதிகமாக சிரிப்பார்கள். அதே சமயம் அடுத்த கனமே இவர்கள் மௌனத்திற்கு சென்று விடுவார்கள். இவர்கள் அதிகமாக தனிமையையும், அமைதியாக இருப்பதற்கு விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். முடிந்தவரை தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதும், கடின உழைப்பை கொடுப்பதும் இவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

Trending News

Latest News

You May Like