1. Home
  2. தமிழ்நாடு

அரசாங்கமும், அதிகாரிகளும் இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தார்களா? குஜராத் அரசை சாடிய ஹைகோர்ட்

1

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டிஆர்பி கேமிங் ஜோன் என்ற பெயரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் இயங்கி வந்தது. வீடியோ கேம்ஸ், நீர் விளையாட்டுகள், கிரிக்கெட் உட்பல பல விளையாட்டுகளை விளையாடுவதற்காக இங்கு தனித்தனியான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு விடுதிகளும் இருக்கின்றன. இதனால் இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து விளையாடி செல்வது வழக்கம்.  இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகளும் உள்ளன. இதுதவிர, உணவு விடுதிகளும் உள்ளன.

இதனிடையே, இந்த விளையாட்டு அரங்கில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக விளையாட்டு மையம் முழுவதும் இந்த தீ பரவியது. இந்த கோர விபத்தில்33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணைகள் பல திடுக்கிடும் தவகல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இந்த விளையாட்டு மையத்தில் தீ விபத்து நேரிடாத வகையில் பாதுகாப்பான அம்சங்களுடன் இருக்கிறது என்பதற்கான தடையில்லா சான்றிதழை வாங்கவே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லால், ஒரே ஒரு வெளியேறும் பாதை மட்டுமே இந்த விளையாட்டு மையத்தில் இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எந்தக் கட்டுமானத்தை அமைத்தாலும் 3, 4 வெளியேறும் பாதைகளாவது (Exit Points) இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், சுமார் 2 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டு மையத்திற்கு ஒரே ஒரு வெளியேறும் வழிதான் இருந்திருக்கிறது. இதுதான், இத்தனை பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழக்க முக்கிய காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது குஜராத் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். "2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விளையாட்டு அரங்கம் தடையில்லா சான்றிதழ் கூட இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அரசாங்கமும், அதிகாரிகளும் இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தார்களா? இல்லையெனில் அந்த விளையாட்டு அரங்குக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்களா அல்லது கண் பார்வை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார்களா? இனியும் உங்களை (குஜராத் அரசை) நாங்கள் நம்ப போவதில்லை" என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like