1. Home
  2. தமிழ்நாடு

இந்தியர்கள் கைவிலங்கு கால் சங்கிலியுடன் நாடு கடத்தப்பட்டனரா..? FACT CHECK சொல்வதென்ன..?

1

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

மேலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக அறிவித்த டொனால்டு டிரம்ப், சட்டவிரோத நுழைவை நிறுத்துவதாகவும் உறுதியளித்தார். இந்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வைரலாகும் வீடியோவில் கைவிலங்குகள் மற்றும் காலில் சங்கிலிகளுடன் மக்கள், சீருடை அணிந்த இராணுவ அதிகாரியைக் கடந்து நடந்து செல்வதையும், மற்றொருவர் அவர்களை வழிநடத்திச் செல்வதும் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஒரு விமானத்தின் பகுதியும் தெரிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன், வேறு எந்த நாடும் இந்தியாவை இதை விட அவமானப்படுத்த முடியாது.. சட்டவிரோத இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு பயங்கரவாதிகள் போல நடத்தும் டிரம்பின் நடைமுறை அனைத்து இந்தியர்களையும் அவமதிப்பதாகும்." என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வைரல் கூற்று தவறானது என நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளில் நாடு கடத்தப்படுபவர்கள் இந்தியர்கள் இல்லை என தெரியவந்துள்ளது. ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தியதில் ஜனவரி 31, 2025 அன்று பதிவேற்றப்பட்ட சரிபார்க்கப்பட்ட ANI செய்தி யூடியூப் சேனலில் வைரல் கிளிப்பின் முழு நீளப் பதிப்பும் இருந்தது தெரியவந்தது. அந்த வீடியோவில் 6:12 நிமிடங்களுக்கு வைரல் காட்சிகள் உள்ளன.


 

வீடியோ விளக்கத்தின்படி, இந்தக் காட்சிகள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் (DoD) ஜனவரி 27, 2025 அன்று வெளியிடப்பட்டன. இது ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் ஜனவரி 23, 2025 அன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவர்களின் மேற்பார்வையின் கீழ் டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸில் நாடுகடத்தல் விமானத்தில் ஏறும் காட்சிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஜனவரி 28, 2025 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு CRUX News காணொளியில், 0:15 வினாடிகளில் வைரலான கிளிப் உள்ளது , மேலும் இந்தக் காட்சி ஜனவரி 23, 2025 அன்று டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஜனவரி 25, 2025 அன்று வெளியிடப்பட்ட "படங்களில்: டிரம்பின் ஆட்சிக்காலத்தில் முதல் நாடு கடத்தல் விமானங்கள் லத்தீன் அமெரிக்காவை வந்தடைகின்றன" என்ற தலைப்பில் France 24 செய்தி வெளியிட்டுள்ளது.

"பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட இந்தப் படம், ஜனவரி 23, 2025 அன்று டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸில் ஒரு அகற்றும் விமானத்திற்காக 60வது ஏர் மொபிலிட்டி விங்கிற்கு நியமிக்கப்பட்ட C-17 குளோப்மாஸ்டர் III இல் ஏறத் தயாராகும், விலங்குகள் பூட்டப்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைக் காட்டுகிறது" என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வைரல் வீடியோவில் உள்ள புலம்பெயர்ந்தோர் ஜனவரி 23, 2025 அன்று டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸில் உள்ள C-17 குளோப்மாஸ்டர் III இல் ஏறினர் என்பதை நியூஸ் மீட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான கீவோர்டுகளை பயன்படுத்தி தேடியதில் ஜனவரி 24, 2025 அன்று வெளியிடப்பட்ட "மெக்ஸிகோ எல்லைக்கு துருப்புக்களை நகர்த்துவதற்கான இராணுவத்தின் போராட்டத்திற்குள்" என்ற தலைப்பில் Military.com செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்தது.

இரண்டு C-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள் டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸிலிருந்தும் அரிசோனாவின் டக்சனிலிருந்தும் புறப்பட்டு கவுதமாலாவை அடைந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வைரலான வீடியோவில் இருப்பது இந்தியர்கள் அல்ல, கவுதமாலா குடியேறியவர்களைக் காட்டுகிறது என்பதைஹயம் நியூஸ் மீட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, வைரலான இந்த வீடியோ உண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்டது, ஜனவரி 23, 2025 அன்று டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸிலிருந்து விலங்குகளால் கட்டப்பட்ட புலம்பெயர்ந்தோர் விமானத்தில் ஏறுவதைக் காட்டுகிறது. ஆனால் இந்த விமானம் இந்தியாவுக்கானது அல்ல, கவுதமாலாவுக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் முதல் குழு பிப்ரவரி 5, 2025 அன்றுதான் இந்தியா வந்தது.

எனவே, இந்தியர்கள் கை விலங்குகளுடன் நாடு கடத்தப்பட்டதாக வைரலாகும் கூற்றுகள் தவறானவை என்று நியூஸ்மீட்டர் உறுதி செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like