பெற்றோர்கள் வரவேற்பு..! குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை..!

பொதுவாக குழந்தைகளுக்கு புதிய நபர்கள் தவறாக பார்த்தாலும், தவறாக தொட்டாலும் நிச்சயம் அச்சம் கலந்த அருவருப்பை தரும். பெற்றோர்கள் அதனால் குழந்தை குட் டச், பேட் டச் பற்றி கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் மழலை வகுப்புக்கு செல்லும் போதே இதை துவங்கலாம்.
நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் கூட குழந்தைகளின் பின் பக்கங்களை தொடுவது, தட்டுவது ஒரு பேட் டச் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஹக் என்ற பேரில இறுக்கமாக கட்டிப்பிடிக்கும் போதும், ஒரு பகுதியை அழுத்த முயற்சித்தலும் கூட பேட் டச் தான்.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.