திருமண நாள் கொண்டாட்டம்.. தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கொலை..!

புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ். இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. இவருடைய வீட்டின் எதிரே வசித்து வரும் சங்கர் - ரமணி தம்பதியினர் தங்கள் திருமண நாளை கொண்டாடினர்.
இதில், வில்லியனூர் அம்மா நகரைச் சேர்ந்த ரமணியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள் அசாருதீன், தமிழ் ஆகியோர் மது அருந்திவிட்டு ரோட்டில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாகவும், இதை சதீஷ் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, ரமணியின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷை கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக குத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த சதீஷை அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சதீஷின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தம்பதியினர் மற்றும் ராஜா, அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.