1. Home
  2. தமிழ்நாடு

வெதர்மேன் எச்சரிக்கை : சென்னையில் நாளை காலைக்குள் கொட்டித் தீர்க்கப்போகும் அதி கனமழை..!

1

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் மழை குறித்த அப்டேட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வரும் மணிநேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

(KTCC) காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை காலைக்குள் 20 செ.மீ வரை மழை பெய்யும் எனவும் டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் KTCC பகுதிகளில் வரும் 16 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் முக்கிய நாளாக இருக்கும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். டெல்டா மற்றும் மத்திய தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று மதியம் முதல் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதனிடையே
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மியான்மர் கடலோர பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வுப்பகதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like