1. Home
  2. தமிழ்நாடு

வெதர்மேன் அலர்ட் : இன்று முதல் 10 நாட்களுக்கு பெரிய சம்பவம் இருக்கு..!

Q

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் கூறுகையில், "கேடிசிசி (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) வடக்கு தமிழ்நாட்டில் மழை அறிவிப்பு.. 10 வறண்ட நாட்களுக்குப் பிறகு சிறிது நிவாரணம் தரும் வகையில் இருக்கும்.

 

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான கேடிசிசி பகுதிகளில் கிட்டத்தட்ட 10 வறண்ட நாட்கள் நிலவிய நிலையில், இப்போது சிறிய நம்பிக்கை தென்படுகிறது! இன்று முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறுகிய மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 10 நாட்களுக்கு மாலை / இரவு நேரங்களில் இந்த குறுகிய கால மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம் நகரத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்யாது. ஹிட் அண்ட் மிஸ்ஸாகவே இவை இருக்கும்.

 

இன்றைய கேடிசிசி வானிலை.. பல பகுதிகளில் குறுகிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம். மழை பரவலாகவும், கடந்து செல்லும் மழையாகவும் இருக்கும்.. எனவே பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இவை குறுகிய கால மழையைப் போலவே இருக்கும். ஜூன் மாதத்தில் மழை மிஸ்ஸான நிலையில், அதற்குப் பதிலாக இது தென் சென்னைக்கு அதிக மழை தரும் என நம்புகிறேன்.

பின்வரும் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.. இந்த மழைகள் பருவமழையால் ஏற்படுவது இல்லை. உள்ளூர் காரணிகள் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவே இந்த மழை பெய்கிறது" என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like