கோவை வெதர்மேன் கொடுத்த அப்டேட்... 3 நாட்களுக்கு சில்லென்ற மழை..!

கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளவது,
மார்ச் 11-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே மிதமான மழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த மழை கண்டிப்பாகப் பரவலாக இருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைத்துப் பகுதிகளிலும் மேகமூட்டம் காணப்படும். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும்தான் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.