அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு அதே போல இருக்கும் என்று பயந்த நிலையில்,இந்த மே மாதம் அக்னி நட்சத்திர வெயிலுக்கு பதிலாக குளு குளு கோடை மழையாக பொலிந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில், தற்போது வானிலை ஆய்வு மையம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில்,சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு பதிவாகும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.25 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-3 செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும். இன்று அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 26 முதல் 28 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்" என்று கூறியிருக்கிறது.
இதனால் மக்கள் வெயிலில் அதிகம் உலவ வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த 5 நாட்களுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.