1. Home
  2. தமிழ்நாடு

மக்களே மாஸ்க் போடுங்க..! நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Q

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று (ஜூன் 05) ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது.

நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like