1. Home
  2. தமிழ்நாடு

மக்களே மாஸ்க் போடுங்க..! 4026 பேருக்கு கொரோனா : 24 மணிநேரத்தில் 5 பேர் பலி..!

Q

கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. 

கேரளாவில் 80 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு நிமோனியா, நீரிழவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களும் இருந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர். மற்றொருவருக்கு 73 வயதாகிறது. இவர்கள் இருவரும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழகத்தில் 69 வயது பெண்மணி ஒருவர் பலியாகி இருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்றுக்கு முன்பாகவே பார்க்கின்சஸ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேற்கு வங்கத்தில் 43 வயது பெண்மணி கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார். இவரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயருவதைக் கண்டு அச்சம் வேண்டாம் என்றும், பொது இடங்கள் அல்லது அதிக மக்கள் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்றும் அந்தந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like