முதல்வா் எடப்பாடி சூளுரை! தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடும் பணியாற்றுவோம்!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாத் தொற்று காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதன் பலனாக தமிழகத்தின் சொந்த வரி வருவாய் நிலைமை சென்ற மாதங்களைக் காட்டிலும் தற்போது மேம்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து கிடைக்கக் கூடிய பங்கு ஆகியவை சென்ற வருடத்தை காட்டிலும் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாநிலத்தின் வரி வருவாயும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததாலும் அச்சத்தின் காரணமாகவும் முத்திரைத் தாள் மற்றும் பதிவுத் துறை கட்டணங்கள் வழியாக தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துள்ளது. தொடர்ச்சியான அயராத பணிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படச் செய்வதற்கு தொடா்ந்து கடுமையாக பாடுபடுவோம் என சூளுரைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.