பல மாவட்டங்களில் சதத்தை தொடும் வெயில் !! சில மாவட்டங்களில் மழை !! வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் இன்னமும் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக் காற்றால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
இது தவிர தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் மேலும் கூறி இருப்பதாவது ;
சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஜூன் 23 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் 23ம் தேதி வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
Newstm.in