1. Home
  2. தமிழ்நாடு

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் - மல்லிகார்ஜூன கார்கே..!

1

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுவே எங்களின் முடிவு, இந்த முடிவை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளோம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “அரசியல் சாசனத்தின் மாண்புகளை காப்பாற்ற நினைக்கும் அத்தனை கட்சிகளையும் இந்தியா கூட்டணி திறந்த மனதுடன் வரவேற்கிறது. மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீர்ப்பளித்து இருக்கிறார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பை எப்படியாவது மாற்ற வேண்டும் என மோடி துடிக்கிறார். நமது அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள சரத்துக்களுக்கு மதிப்பளிக்கும், அர்பணிப்புடன் உழைக்கும் அனைத்து கட்சிகளையும் I.N.D.I.A. கூட்டணி வரவேற்கும். மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், நாட்டு மக்களுக்கு  கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெற்றி. இது மோடியின் தனிப்பட்ட முறையிலான தோல்வி மட்டுமல்ல, பாஜகவின் அப்பட்டமான தோல்வியும் கூட. இதை மறைக்க அவர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வார்கள்” என்றார்.

Trending News

Latest News

You May Like