மாணவர்களோடு துணை நிற்போம்.. அறிக்கையை தொடர்ந்து நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ !

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இது தொடர்பாக நடிகர் சூர்யா காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் கல்வியை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்காக நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வீடியோ வடிவில் பதிவிட்டுள்ளார் அதில் ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்.
ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம் என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020
newstm.in