1. Home
  2. தமிழ்நாடு

இன்று தான் கடைசி - நாளை முதல் 2000 ரூபாய் நோட்டு வாங்க மாட்டோம்..!

1

2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு,கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 

ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 2 நாட்களில் முடிகிறது. இந்த வாரத்தில் இன்றும் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28ஆம் தேதி மிலாது நபிக்காக இன்றைய தினம் வங்கி விடுமுறையாக உள்ளது. எனவே தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் இதுவரை 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்தநிலையில் பெட்ரோல் பங்க்குகளில் இன்று மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News

Latest News

You May Like