1. Home
  2. தமிழ்நாடு

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எங்களை முழுமையாக பேசவிடவில்லை : வானதி சீனிவாசன் ஆவேசம்..!

1

இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், சிறையில் நீண்டகாலமாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கோவையில் 1998ஆம் ஆண்டு 11 இடங்களுக்கும் மேலாக குண்டு வெடிப்பு நடைபெற்றது.

58 உயிரிழந்துள்ளார்கள், 200 பேர் பாதிக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கானோருக்கு இன்னும் கூட அந்த பாதிப்பில் உள்ளார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினரும், குண்டுவெடிப்பால் பாதிக்கபட்டவர்களும் பாஜகவினர் சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கொடூரமாக தவறு செய்தவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த நிலைப்பாட்டை எடுத்துவிடக்கூடாது என என்னிடம் கூறினர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதே மாதம் கோவை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதை திமுக அரசு அதை சிலிண்டர் வெடிப்பு விபத்து என கூறிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த குண்டு வெடிப்பு என்பது திட்டமிட்டப்பட்ட சதி செயல். இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் தொடர்புடையவர்கள் உள்ளார்கள் என என்.ஐ.ஏ சொல்லி உள்ளது.

இந்த சூழலில் கோவை இன்னும் கூட தீவிரவாதிகள் செயல்பாட்டில் இன்னும் இருக்கும் காரணத்தால் எங்கள் பகுதியின் பாதுகாப்பை பாதிக்கும் என கருதுகிறோம். இஸ்லாமிய வாக்குவங்கிக்காக நீங்கள் எப்படி அரசியல் செய்கிறீர்களோ, பாதிக்கப்பட்ட இந்துக்கள் சார்பாகவும் நாங்கள் அவர்கள் குரலை பதிவு செய்ய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். 

ஆனால் சபாநாயகர் அவர்கள் வழக்கம் போல் அமைச்சர்கள் சொல்லவேண்டிய பதில்களை எனக்கு பதில் சொல்கிறார். எங்களை முழுமையாக பேசவிடவில்லை. சட்டப்பேரவையில் நான் முழுமையாக பேசிய வீடியோவை கூட கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் இவர்கள் ஜனநாயக முறைப்பட சட்டமன்றத்தை நடத்தும் விஷயமாக பார்க்கலாம்.


 


 

Trending News

Latest News

You May Like