கருணாநிதி வழியில் ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்களும் வரவேற்கிறோம் : செல்லூர் கே.ராஜூ..!

மதுரையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து மாநகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில் "2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது, பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அ.தி.மு.க. மேற்க்கொண்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியின் தில்லு முல்லுகளை மறைக்கவே சனாதனம் குறித்து உதயநிதி பேசி வருகிறார்கள்,
1999 ல் தி.மு.க. பாஜகவுடன் கூட்டணி வைத்த போது சனாதனம் எங்கே போனது?, தி.மு.க. பாஜகவுடன் கூட்டணியின் போது சமதர்மம் கூட்டணி இல்லாத போது சனாதனமா?, இந்தியாவில் சாதி, மதம் இல்லை, மக்களை திசை திருப்பவே உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசி உள்ளார், எடப்பாடி கே.பழனிச்சாமி காலில் நான் விழுந்து வணங்கியதில் எந்தவொரு தவறுமில்லை, பாரத பிரதமரே பாரத் விவகாரத்தை பேச வேண்டாம் என சொல்லி விட்டார், ஆகவே நோ கமாண்ட்ஸ், 1971 ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியே ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்று உள்ளார், கருணாநிதி வழியில் ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்களும் வரவேற்கிறோம்" என கூறினார்.