இரு மொழி கொள்கைதான் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோபாலபுரத்தில் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
நேற்றைய தினம் நடைபெற்ற எனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நான் தெளிவாக கூறி இருக்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், குறிப்பாக இன்று திணிக்கப்படக்கூடிய ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும்.
இருமொழிக் கொள்கையை தான் கொண்டு வரவேண்டும். அது தான் எனது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி. எனது கவலைகள் எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான். மாநில உரிமைகளை பெற வேண்டும் என்பது பற்றி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.