நாம் தமிழர் சீமான் உயிருக்கு ஆபத்து..!

சீமான் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்தது.
தந்தை பெரியார், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என பேசினார்.திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்றார். பெண்களின் கர்ப்பப் பைகளை அகற்ற சொன்னார். திருமணமான பெண்கள், விரும்பிய ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என பிரசாரம் செய்தார்.தமிழ்ச் சமூகத்தை சீர்திருத்துவதாக சொல்லி தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர்தான் பெரியார் என சீமான் விமர்சனம் செய்தார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூறியதாலேயே பெரியாரை எதிர்த்து பேசுவதாகவும் கூறினார். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தந்தை பெரியாரின் தொண்டர்கள் மீது பிரபாகரன் கொடுத்து அனுப்பிய வெடிகுண்டுகளை வீசுவேன் எனவும் சீமான் பேசியுள்ளார். சீமானின் இந்த பேச்சுகளுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தான் சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு விட்டு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட தபெதிகவை சேர்ந்த டிங்கர் குமரனை போலீசார் பிடித்தனர். போலீஸ் பிடித்ததும் கையில் இருந்த பெட்ரோல் குண்டுகளை சாலையில் தூக்கி அவர் வீசியுள்ளார்
பெட்ரோல் குண்டு தயாரிப்பு தொடர்பாக சில பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.