“இந்தியாவுக்கு பயந்து அபிநந்தனை விடுவித்தோம்” : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
“இந்தியாவுக்கு பயந்து அபிநந்தனை விடுவித்தோம்” : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!

இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பயந்து தான் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்தோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்குப் பதிலடியாக பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.
இந்த நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அவரை மார்ச் 1ஆம் தேதி பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அபிநந்தன் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரை விடுவிக்கவில்லை என்றால், இந்தியா கடுமையாக தாக்குதல் நடத்தும் என அஞ்சி தான் விடுதலை செய்ததாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவருமான அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார்.
அபிநந்தன் பிடிபட்டதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தலைமையில் அவரசக் கூட்டம் நடந்தது என்றும், அதனைத் தொடர்ந்து அபிநந்தனை விடுதலை செய் முடிவு செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
newstm.in