1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் எப்போதும் நிதி ஒதுக்குவதில் பாகுபாடும் காட்டவில்லை : நிர்மலா சீதாராமன்..!

1

மக்களவையில் நேற்றைய நிகழ்வின்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல; நிதிக்குழுதான். நிதிக்குழுவும் தாங்களாகவே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு அதிகாரிகள் நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

நிதிக்குழு பரிந்துரைப்பதைதான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையைதான் ஒவ்வொரு நிதி அமைச்சர் யும் பின்பற்றுகிறார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார்போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து 2024-25ம் ஆண்டிற்கான ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மேலும் 2023-24ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகள், இரண்டாம் தொகுதியைக் காட்டும் அறிக்கையை வழங்கினார்.

Trending News

Latest News

You May Like