1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி சுமார் 85 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம்..!

Q

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநாட்டில் பேசிய தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தி.மு.க. இளைஞரணியின் மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி; சேலத்தில் வீரத்தோடு தி.மு.க. இளைஞரணி படைத் திரண்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவே சேலம் மாநாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. 10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவுக்கட்ட படைத் தயாராகி உள்ளது.
உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம்; நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி சுமார் 85 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்; நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நாங்கள் ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம்.
நிதி தருவதற்கு நாங்கள் என்ன ஏடிஎம் இயந்திரமா என்று கேட்டார்கள், அதற்கே நான் பதிலளித்தேன். ஒடுக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளி, சிறுபான்மையினரோடு கைகோர்த்து தி.மு.க. செயல்படுகிறது. சாதி பேதமற்ற சமூகம் அமைய வேண்டும் என முதலமைச்சர் விரும்பினார். அனைவரோடும் சேர்ந்து பயணித்து தி.மு.க. செயல்படுகிறது. யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்களுக்கும் சேர்த்து தி.மு.க. உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் இளைஞரணி மாநாடு தேர்தலுக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டில் பேசிய உதயநிதி, மக்களவை தேர்தலில் திமுக இளைஞரணியை சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு தர கோரிக்கை விடுத்தார். மாநாட்டு மேடையிலேயே உதயநிதி கோரிக்கை விடுத்தது, கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே தங்களது வாய்ப்பு பறிபோகுமோ என்ற பீதியை கிளப்பியுள்ளது.

Trending News

Latest News

You May Like