1. Home
  2. தமிழ்நாடு

"நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார்" - அமைச்சர் ரகுபதி..!

1

சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் இன்று திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கான உடை காவி நிறத்தில் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஆளுநர் ரவி, இதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லைகுரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல, நம்முடைய கெட்ட நேரம் இந்த ஆளுநர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார். ஏற்கனவே காவி உடை அணிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மீண்டும் காவி உடை அணிவித்திருக்கிறார் என்றால் அவரை என்னதான் செய்ய முடியும். பிடிவாதத்துக்கு மருந்து இல்லை என்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like