1. Home
  2. தமிழ்நாடு

ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான் - மாஸாக வெளியான ஜெயிலர் பட ட்ரைலர்..!

1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் மூன்று பாடல்களும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் ரஜினி செம மாஸான லுக்கில் காணப்படுகிறார். இதில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். பேரனாக சிறுவன் ரித்விக் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார்.

மேலும் பூனை குட்டி மாதிரி இருக்குறவங்க திடீரென புலியா மாறிடுவாங்க….. ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான் என்ற ரஜினியின் மாஸான வசனங்கள் இடம் பெற்றுள்ளன.டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.ஆக்சன் காட்சிகளில் ரஜினி மிரட்டி இருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை தெறிக்க விடுகின்றன.

ஜெயிலர் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான  எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like