1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை..! நாங்க தமிழகத்தை விட்டே போறோம்.. பரந்தூர் கிராம மக்கள் அறிவிப்பு..!

1

சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறன. குடியிருப்புகள், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 690 நாட்களாக போராடி வருகிறார்கள். அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட அலுவலரை நேரில் சந்தித்து அங்கு வாழ்விடம் கேட்டு அங்கேயே குடியேற போவதாக தெரிவித்துள்ளனர். அதாவது 24 ஆம் தேதி காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு ஆந்திராவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளார்கள்.

Trending News

Latest News

You May Like