1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பது தான் முடிவு : எடப்பாடி பழனிசாமி!

1

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. நான் தான் தெளிவாக கூறி வருகிறேனே.. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது எங்கள் உரிமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன் பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு. பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக தலை​வர்​களும், அதி​முக தலை​வர்​களும் இணைந்து கூட்​ட​ணியை உரு​வாக்கி இருக்​கிறோம். வரும் 2026 சட்​டப்பேர​வைத் தேர்​தலை தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளு​டன் இணைந்து சந்​திக்க இருக்கிறோம். வரும் தேர்​தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலை​மை​யிலும், தமிழகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யிலும் போட்​டி​யிட இருக்​கிறோம்.

வரப்போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக – அ​தி​முக​வின் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பெற்று ஆட்​சி​யமைக்​கும் என்​ப​தில் எனக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. பாஜக​வும், அதி​முக​வும் இணைந்துதான் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சியமைக்​கப் போகிறோம். அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில்தான் கூட்​டணி இருக்​கும்.

அமைச்​சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்​யப்​படும். எங்​களு​டன் கூட்​ட​ணி​யில் இணைந்​ததற்கு அதி​முக எந்​த​வித கோரிக்​கை​யும், நிபந்​தனை​யும் விதிக்​க​வில்​லை. அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக​வின் தலை​யீடு ஒரு​போதும் இருக்​காது. கூட்​ட​ணி​யில் இணைவதன் மூலம் இருதரப்​புக்​குமே பலனிருக்​கிறது. யார் யாருக்கு எத்​தனை தொகு​தி​கள் என்​பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்​சி​யில் எத்​தகைய பங்கு என்​பதும் பின்னர்தான் பேசப்​படும்” என்று அமித் ஷா பேசியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சை வைத்து இன்றுவரை அதிமுக பாஜகவிடம் தன்னை அடகுவைத்துவிட்டது, பாஜக தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து எடப்பாடி பழனிசாமியும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், இன்றும் அதுபற்றி கேள்வி எழுப்பப்பட அவர் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like