1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை.. நாங்கள் யாருக்கு ஆதரவு தெரியுமா ? ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!

1

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் திமுக vs நாதக என்று களம் மாறி இருக்கிறது. பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான், பெரியாரின் சொந்த மண்ணான ஈரோட்டில் எப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபடப் போகிறார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் திமுகவினர் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். அதேபோல் திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்று வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். இதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் மதியம் 3 மணிக்கு பின் வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேசுகையில், நாங்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. நிச்சயம் ஆதரவளிப்போம். யாருக்கு என்பது மட்டும் ரகசியம். அதேபோல் அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கிற சூழல் உள்ளது. இதன் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும்.

திமுக ஆட்சியில் எதேச்சதிகாரமும், அதிகார துஷ்பிரயோகமும் என்று அனைத்தும் இந்த தேர்தலில் இருக்கும். அதனால் நாங்களும் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. நாங்கள் யாருக்கு ஆதரவளிப்போம் என்பது இறுதி வேட்பாளர் பட்டியல் வந்தபின் தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த செந்தில் முருகன் சுயேட்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் விதிகளை மீறியதாக செந்தில் முருகன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் நாட்களில் அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ், பாமக உள்ளிட்டோரிடம் ஆதரவு கோருவாரா என்ற கேள்வியும் உள்ளது.

Trending News

Latest News

You May Like