எங்கள் நிலைப்பாட்டில் 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் : த.வெ.க. திட்டவட்டம்..!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அதைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.
இந்நிலையில், பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக த.வெ.க. திட்டவட்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக த.வெ.க. கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், "மக்களால் வெறுக்கப்படும் பா.ஜ.க.வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100% அல்ல 1000 % உறுதியாக உள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி; விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளோம். செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் எப்போதும் மாற்றமில்லை" என்று கூறினார்.