தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி… 4 வயது சிறுவன் பலி!

கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் லாரி மோதியது. எம்.ஆர்.சி சிக்னல் அருகே வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி முதலில் சிக்னல் போஸ் மீது மோதி, பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியது.
இதனால் அப்பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது. லாரி மோதியதில் சிக்னல் போஸ்ட் உடைந்து கீழே விழுந்தது. சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீதும் லாரி மோதியது.
இதில் பைக்கில் தனது தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். லாரியைக் கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
newstm.in