1. Home
  2. தமிழ்நாடு

இரு பிரிவாக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டதா? - அமைச்சர் விளக்கம் !

இரு பிரிவாக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டதா? - அமைச்சர் விளக்கம் !


அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாகுபாடின்றி ஒருமித்த கருத்துடன் தான் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். 11 பேர் குழுவில் ஈபிஎஸ் தரப்பில் 6, ஓபிஎஸ் தரப்பில் 5 பேர் இடம்பெற்றது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

மேலும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கனவில் மண் விழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இரு பிரிவாக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டதா? - அமைச்சர் விளக்கம் !

முன்னதாக இன்று இன்று காலை 9 மணியளவில் முதல்வரும், துணை முதல்வரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

அதேபோல் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like