1. Home
  2. தமிழ்நாடு

ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே இருந்ததா ? என்ன முட்டாள் தனம் பேச்சு இது நடிகை ஷர்மிளா மற்றும் சின்மயி விளாசல்..!

1

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் மீது மோசடி புகாரை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எப்பாடி பழனிசாமியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை நவடிக்கை எடுத்தது போன்று மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் 12 படுக்கை அறைகளைக் கொண்ட பிரமாண்ட வீடு வைத்துள்ளார்.

பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கூட அப்படியொரு வீடு கிடையாது. அவர் எப்பொழுதும் எளிமையாக இருக்கக் கூடியவர். ஆனால், அவர் பெயரைக் கூறி வெங்கடாசலம் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவரால் சேலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர். நான் தான் முதலில் வெளியில் சொல்லியுள்ளேன். இதன் பின்னர் ஒவ்வொருவராக வெளிவருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டடங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறிக் கழகத்திற்கும் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி.ராஜூ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு , சென்னையை அடுத்த கூவத்தூரில் 2017ம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறி சில விவகாரங்களை தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுபற்றி பேட்டி அளித்த ஏவி ராஜூ கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி கட்சியை நடத்த தெரியாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார். கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்தானே இவர். இவருக்கு எப்படி கட்சி விதிகள் தெரியும். கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது. நீ சாதாரண ஒரு எம்எல்ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்ததாய் என்று தெரியும்.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, வெங்கடாச்சலம் தனக்கு இந்த பிரபல நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்ததாக கூறியுள்ளார். மேலும் நடிகர் கருணாஸ்தான் அனைவருக்கும் எந்தெநத நடிகை வேண்டும் என கேட்டு ஏற்பாடு செய்து கொடுத்தார் என கூறியுள்ளார். பல நடிகைகள் அங்கு வரவழைக்கப்பட்டனர், யார் யார் என சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். 25 லட்ச ரூபாய் கொடுத்து நடிகையை ஏற்பாடு செய்தனர், இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமிதான் பணம் கொடுத்திருப்பார் என கூறியுள்ளார்

இதற்கு நான் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் இதெல்லாம் நடந்தது. பல எம்எல்ஏக்கள்.. எங்களால் இது மட்டும்தான் செய்ய முடியும். வேறு வழியில்லை. ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தது எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் பணம் கொடுத்தார். எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டுமே? அதற்கு எடப்பாடிதான் பணம் கொடுத்தார். இதை எல்லாம் செய்துவிட்டு இப்போது என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். என்னை நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க முடியுமா? அப்படி 2 மா.செக்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" இவ்வாறு ஏவி ராஜூ அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இது குறித்து நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்?" என்று நடிகை ஷர்மிளா சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.


இது குறித்து பேசிய பாடகி சின்மயி, ஒரு மோசமான ஆண் அரசியல்வாதி நடிகை ஒருவரை பற்றி மோசமாக பேசியிருக்கிறார். இவர்களை எல்லாம் ஜெஜெ மேடம் தன் காலில் போட்டு மிதித்தது நல்லது. அவர்களை பற்றி மேடத்திற்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதால் பாலியல் பலாத்காரம் செய்பவர்களும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

தவறு செய்பவர்களின் பெயரை சொன்னால் அதை சொல்லும் பெண்களை அரசியல் கட்சி ஆட்கள் சீண்டுகிறார்கள். பாடகர் கார்த்திக்கிற்கு ஜக்கி வாசுதேவுடன் தொடர்பு உள்ளது. சிவராத்திரி கொண்டாட்டங்களின்போது அவரை மூளைச்சலவை செய்துவிட்டார் ஜக்கி வாசுதேவ். வைரமுத்துவுக்கு முதல்வர் ஆதரவு உள்ளது. இது தான் பலாத்கார கலாச்சாரத்தை கொண்டாடும் தமிழகத்தின் உண்மையான முகம்.இங்குள்ள அரசியல்வாதிகள் பெண்களை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார்கள். ஒரு ஆணை சஸ்பெண்ட் செய்ததும் ஆளும் கட்சிக்கு அழைத்து வரப்பட்டார். உங்களுக்கு தமிழ் தெரிந்தால் வாந்தி எடுத்துவிடுவீர்கள்.

இன்று மேலும் ஒரு அரசியல்வாதி அதிமுகவுடன் தொடர்பு இருப்பவர், அவர்களின் அரசியல் ஆட்டத்துடன் தொடர்பில்லாத ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார் என்றார். 


 

Trending News

Latest News

You May Like