1. Home
  2. தமிழ்நாடு

கோலிக்கு கேப்டன் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டதா? உண்மையை உடைத்த கங்குலி !

கோலிக்கு கேப்டன் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டதா? உண்மையை உடைத்த கங்குலி !


ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்த வேண்டும் என்கிற முடிவைத் தேர்வுக் குழுவும் பிசிசிஐயும் சேர்ந்தே எடுத்ததாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நேற்று(டிச.8) நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, விராட் கோலி நீக்கம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதன்காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ மீது அதிருப்தி அடைந்தனர். அதாவது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக விராட் கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், கோலி விலக மறுத்துவிட்டதாகவும் ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

கோலிக்கு கேப்டன் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டதா? உண்மையை உடைத்த கங்குலி !

இந்த நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்திருப்பது பற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, விராட் கோலியை நீக்கும் முடிவை பிசிசிஐயும், தேர்வுக் குழுவும் சேர்ந்துதான் எடுத்தது. டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது எனத் தேர்வுக் குழுவினர் எண்ணினர். எனவே, டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவும் செயல்படட்டும் என முடிவெடுக்கப்பட்டது.

கோலிக்கு கேப்டன் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டதா? உண்மையை உடைத்த கங்குலி !

மேலும், பிசிசிஐ தலைவராக விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். தேர்வுக் குழுத் தலைவர்களும் அவரிடம் பேசினார்கள் என்றார்.

ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாகத் தொடருவார். இந்திய கிரிக்கெட் சரியான கரங்களில் இருப்பதை பிசிசிஐ உறுதியாக நம்புகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நன்றி என, கங்குலி தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like