எச்சரிக்கை! அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்!!

எச்சரிக்கை! அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்!!

எச்சரிக்கை! அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்!!
X

கனமழை பெய்யும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கேரளாவில் மழை பெய்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து அவர்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்றாலும் கூட இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாமல் உள்ளது.

சமீபத்தில் மூணாறு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கூட பலரும் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா நீங்கலாக இடுக்கி உள்ளிட்ட ஏனைய 10 மாவட்டங்களுக்கு கன மழைக்கான “மஞ்சள் அலர்ட்எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி வரை கன மழைக்கான “மஞ்சள் அலர்ட்விடுக்கப்பட்டு கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 13ஆம் தேதி வரை மாநிலத்தில் பரவலாக மழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it