1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. "கடும் நடவடிக்கை பாயும்.."

1

தமிழகத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி அட்டைதாரர்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், கைரேகைப் பதிவு வேலை செய்யவில்லை என்றால் கூட, அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறித்த விவரங்களை தகவல் பலகையில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,

நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது

பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுருந்தது.

இருப்பினும், சில நியாயவிலைக் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் உள்ளனர் . மக்களிடம் இருந்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல் படுத்து உள்ளது

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like