இந்தியாவிற்கு எச்சரிக்கை..! சிந்து நீரை தராவிட்டால் போர் தொடுப்போம் : பாக். முன்னாள் வெளியுறவு மந்திரி..!

இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற ரீதியில் ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாகப் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியதாவது:
"சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் பாகிஸ்தான் போருக்குச் செல்லும். இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது. உடன்படிக்கையைச் சட்டவிரோதமாக இந்தியா நிறுத்தியதற்குப் பதிலடி கொடுப்போம் . இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தண்ணீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்வது, அல்லது ஆறு நதிகளிலிருந்தும் தண்ணீரை நாங்கள் பெறுவோம். சிந்து நதி உடன்படிக்கை முடிந்துவிட்டதாகவும், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இந்தியா கூறுவது சட்டவிரோதமானது" என்றார்.