மக்களே எச்சரிக்கை..! இன்று இரவு தான் கோர தாண்டவம் தொடங்கும்..!

தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், இன்று காலை சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகளில் மழை தொடங்கியது.
தற்போது ஒட்டுமொத்த வட மாவட்டங்களிலும் மழை பரவியிருக்கிறது. அதிலும் குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி வரைக்குமே மழை மேகங்கள் நகர்ந்துள்ளன. வடக்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கன மழை பதிவாகி வருகிறது. அடுத்த 2 மணி நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையை எதிர்பார்க்கலாம்.
இது மிதமானது முதல் சற்றே கனமழையாக இருக்கும். அதாவது விட்டு விட்டு மழை பெய்யும். அடுத்த 36 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் முழுமையான தாக்கம் இன்று இரவு தான் தொடங்கும் என்று தெரிவித்தார். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, வரும் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும். நாளைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.