1. Home
  2. தமிழ்நாடு

மக்களே எச்சரிக்கை..! வேகமெடுக்கும் ஃபெங்கல் புயல்..!

1

வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் சென்னையில் இருந்து, 110 கி.மீ தொலைவில் உள்ளது. பெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் இன்று காலை வரை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதன் வேகம் சற்று அதிகரித்து, 12 கி.மீ/ மணி என்ற வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் புயலின் வேகம் 13 கி.மீ/ மணி என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தான் வேகம் சற்று அதிகரித்து 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனினும், முன்னதாக இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான வானிலை தகவலின்படி இன்று மாலை தான் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like