1. Home
  2. தமிழ்நாடு

மக்களே எச்சரிக்கை..! 22 நாட்களில் 170 பேர் டெங்குவால் பாதிப்பு..!

1

ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகும் போது நமது உடலில் உள்ள பிளேட்டுகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கடுமையான உடல் சோர்வையும், சில நேரத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. எனவே தான் டெங்கு பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

ஏடிஸ் என்ற கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் கடித்து 5 அல்லது 10 நாள்களுக்குப் பிறகு தான் டெங்கு பாதிப்பு குறித்த அறிகுறிகள் தெரிகிறது. குறிப்பாக தலைவலி, காய்ச்சல், எலும்பு வலி, அசௌகரியம், தசைவலி, உடல் அசதி. கண்கள் சிவந்து போதல்,வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும். டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களைக் கடிக்கும் என்பதால், காலை நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த கொசுக்கள் கை முட்டி மற்றும் கால் முட்டி ஆகிய பகுதிகளில் தான் அதிகளவில் கடிக்கிறது.

மற்ற கொசுக்களைப் போன்றில்லாமல் டெங்கு கொசுவை எளிதாக அடையாளம் கண்டுப்பிடித்து விடமுடியும். உருவத்தில் பெரியதாகவும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான கோடுகள் அதிகளவில் இருக்கும். மேலும் தண்ணீர் தேங்கும் இடத்தில் கொசுக்களின் முட்டைகள் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச்சுற்றியுள்ள இடங்களில் உள்ள தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 நாட்களில் 170 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு என பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like